உயர் பதவிகள் பற்றிய குழு, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட நான்கு முக்கிய நியமனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்க நியமிக்கப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவராக S.A.M. பீரிஸ், குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவராக H.M.P. ரத்நாயக்க, தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவராக டொக்டர் (திருமதி) W.M.V. வணசிங்க ஆகியோரின் நியமனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான குமார ஜயகொடி, தயாசிறி ஜயசேகர (சட்டத்தரணி) ஆகியோர் கலந்து கொண்டனர்.








