அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 10.08.2026 சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், நாட்டின் முன்னணி வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலையில் சிறிய மாற்றங்கள் பதிவாகியுள்ளன. எனினும், டொலரின் விற்பனை விலை சில வங்கிகளில் மாற்றமின்றி காணப்படுகிறது.
செலான் வங்கி:
அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.331.25 ஆகவும், விற்பனை விலை ரூ.340.50 ஆகவும் மாற்றமின்றி உள்ளது.
NDB வங்கி:
கொள்வனவு விலை ரூ.330.85 ஆகவும், விற்பனை விலை ரூ.339.85 ஆகவும் மாற்றமின்றி காணப்படுகிறது.
மக்கள் வங்கி:
கொள்வனவு விலை ரூ.331.27 இலிருந்து ரூ.331.07 ஆகவும், விற்பனை விலை ரூ.339.48 இலிருந்து ரூ.339.28 ஆகவும் குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கி:
கொள்வனவு விலை ரூ.329.55 ஆகவும், விற்பனை விலை ரூ.339.50 ஆகவும் மாற்றமின்றி உள்ளது.
சம்பத் வங்கி:
கொள்வனவு விலை ரூ.331.75 இலிருந்து ரூ.331.50 ஆகவும், விற்பனை விலை ரூ.339.75 இலிருந்து ரூ.339.50 ஆகவும் குறைந்துள்ளது.
இதன்படி, இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை பெரும்பாலான வங்கிகளில் ரூ.339 முதல் ரூ.340.50 வரையில் பதிவாகியுள்ளது.
அப்ரா அன்சார்








