இலங்கை நாடாளுமன்றம் செப்டம்பர் 8 முதல் 11ஆம் திகதி வரை கூடவுள்ளதாக நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் (20ஆம் திகதி) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 8, செவ்வாய்க்கிழமை
காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) முதல் 22(6) வரையிலான பிரிவுகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற அலுவல்கள் இடம்பெறும்.
காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கும், 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை, மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் (அத்தியாயம் 203) கீழ் வெளியிடப்பட்ட 2489/22 மற்றும் 2493/19 ஆகிய விசேட வர்த்தமானி அறிவித்தல்களில் உள்ள இரண்டு கட்டளைகள் தொடர்பில் அங்கீகாரம் பெறுவதற்கான விவாதம் நடைபெறும்.
மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் ஒத்திவைப்பு நேரப் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும்.
செப்டம்பர் 9, புதன்கிழமை
காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) முதல் 22(6) வரையிலான நாடாளுமன்ற அலுவல்கள் இடம்பெறும்.
காலை 10.00 மணி முதல் 10.30 மணி வரை பிரதமரிடம் கேள்விகள் கேட்கப்படும். 10.30 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கும், 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை பாதுகாப்புப் படைகளின் பிரதான அதிகாரி பதவி (நீக்குதல்) சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெறும்.
மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரக் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 10, வியாழக்கிழமை
காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) முதல் 22(6) வரையிலான நாடாளுமன்ற அலுவல்கள் இடம்பெறும்.
காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கும், 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை பெண்கள் வலுவூட்டல் சட்டத்தின் கீழான தீர்மானம் தொடர்பில் அங்கீகாரம் பெறுவதற்கான விவாதம் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் ஒத்திவைப்பு நேரப் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும்.
செப்டம்பர் 11, வெள்ளிக்கிழமை
காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) முதல் 22(6) வரையிலான நாடாளுமன்ற அலுவல்கள் இடம்பெறும்.
காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கும், 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் விவாதிக்கப்படவுள்ளன:
- நளின் பண்டார ஜயமஹ – பெட்ரோலியம், எரிபொருள் மற்றும் நீர் தொடர்பான கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருதல்.
- அஜித் பி. பெரேரா – இலங்கையில் பிறப்பு எண்ணிக்கையை அதிகரிக்க குடும்ப அலகுகளுக்கு ஊக்குவிப்பு வழங்குதல்.
- ஹர்ஷ டி சில்வா – தியகம வனப்பகுதியைப் பாதுகாத்தல்.
- சுஜீவ திஸாநாயக்க – பிரிவேனா ஆசிரியர்களின் சம்பளத்திலிருந்து அறவிடப்படும் மேலதிக 6% ஓய்வூதியக் கழிவை இரத்து செய்தல்.
- நந்த பண்டார – மலைப்பாங்கான பகுதிகளில் உணவுப் பயிர் சாகுபடியை மேம்படுத்துதல்.
- டி.கே. ஜயசுந்தர – கித்துல் தொழிற்துறையை அபிவிருத்தி செய்தல்.
- எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் – இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்காக மருத்துவ பீடமொன்றை நிறுவுதல்.
இதனைத் தொடர்ந்து, மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரக் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.