Afra Ansar
COLOMBO
இலங்கையில் மருத்துவமனைகளை அமைப்பதற்கும், நாட்டின் சுகாதாரத் துறையில் முதலீடு செய்வதற்கும் இந்தியாவின் Apollo Hospitals ஆர்வம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Apollo Hospitals நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வி. நவீன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை திங்கட்கிழமை (21) சந்தித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது இலங்கையின் சுகாதாரத் துறையில் மேற்கொள்ளக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் இரு தரப்புக்கும் இடையிலான விரிவான சுகாதார ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் மருத்துவமனைகளை அமைப்பதன் மூலம் நாட்டில் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்துவதில் Apollo Hospitals ஆர்வம் தெரிவித்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.








