இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையவழி சான்றிதழ் வழங்கும் சேவை அடுத்த இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, நாளை (07) மற்றும் நாளை மறுதினம் (08) ஆகிய இரண்டு நாட்களிலும் இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழி சான்றிதழ் வழங்கும் சேவையுடன் தொடர்புடைய தகவல் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதுப்பித்தல் பணிகள் காரணமாகவே இந்தத் தற்காலிக இடைநிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாகப் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.








