எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தலுக்கு முன்னர் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஈரான் மீதான அமெரிக்காவின் தடைகள் தொடர்ந்து அமுலில் இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.







