இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 போட்டியில், 125 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி, 91 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணிக்காக பெத்தும் நிஸ்ஸங்க 36 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்நிலையில், 125 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி தற்போது 91 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து துடுப்பெடுத்தாடி வருகிறது.








