அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (21) மேலும் உயர்வடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் நேற்று ரூ.326.05 இலிருந்து இன்று ரூ.325.10 ஆகக் குறைந்துள்ளது.
அதேவேளை, விற்பனை விகிதமும் ரூ.335.01 இலிருந்து ரூ.334.23 ஆகக் குறைந்துள்ளது.
எனினும், வளைகுடா நாடுகளின் நாணயங்கள் உள்ளிட்ட ஏனைய சில நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறியளவிலான மாற்றமே ஏற்பட்டுள்ளது.









