அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
இதற்கமைய, WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.57% அதிகரித்து 85.54 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
அதேவேளை, Brent ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.84% அதிகரித்து 90.60 அமெரிக்க டொலர்களாகவும், Murban ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 4.04% அதிகரித்து 95.75 அமெரிக்க டொலர்களாகவும் உயர்ந்துள்ளன.
கடந்த ஜூலை மாதத்துக்குப் பின்னர் முதன்முறையாக ஈரானின் லாரக் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்குப் பதிலடியாக, ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த இராணுவ மோதல்களால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் குறித்த அச்சம் அதிகரித்துள்ளதன் காரணமாக கச்சா எண்ணெய் விலைகள் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








