எல்லாம் வல்ல கருணைக்கடலாகிய இறைவன் சிவபெருமானின் திருவடிகள் பணிந்து அனைத்து வாசகர்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சியோடு எல்லா உயிர்களும் வாழவேண்டும். இருள் மயமான தீய சிந்தனைகள்,தீய சக்திகள் தீய நடத்தைகள் நீங்கி ஒளிமயமான நல்ல சிந்தனைகள் நல்ல சக்திகள் நல்ல நடத்தைகள் பெருகவும்.இந் நாளை “நரக சதுர்த்தசி” என சாஸ்திரங்கள் கூறும் பாவங்கள் விலகி புண்ணியங்கள் பெருகும் நாள் என்ட்ரி நாளில் பிரார்த்தனை செய்வதாலும் தான தர்மங்கள் செய்வதாலும் நரக பயம் நீங்கும்.எல்லோர்க்கும் இறை அருளும் சாந்தி,சமாதானம் சௌபாக்கியம் நிறைந்த ஓர் நாள் வாழ்வு அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.நம் நாடு புதிய சங்கல்பத்துடன் பயணிக்க ஆரம்பித்துள்ளது. நாட்டு மக்களாகிய நாமும் “தூய்மையான இலங்கை” சங்கல்பத்துடன் செயல்பட தொடங்கியுள்ளோம்.ஊழல் அற்ற நீதியானதும் சமத்துவம்,பாதுகாப்பு நல்லிணக்கம் சகவாழ்வு நிரம்பிய வளமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஆசிகளை பரம்பொருளாம் சிவபெருமானிடம் வேண்டுகிறேன் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்

October 20, 2025
0 Comment
129 Views








