கண்டி – மாத்தளை பிரதான வீதியின் அக்குரணை, குருகொட பகுதியில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
குறித்த வீதியின் 7ஆவது கிலோமீற்றர் தூண் அருகே சிமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று பல வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தைத் தொடர்ந்து கண்டி – மாத்தளை பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதால், குறித்த பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
விபத்து இடம்பெற்றமைக்கான முழுமையான காரணங்கள் உள்ளிட்ட மேலதிக விபரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.








