ஏ.எஸ்.எம்.ஜாவித் 2024.10.27
இர்ஷாத் ஏ காதர் நற்பணி மன்றம் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையுடன் இணைந்து வழங்கும் ” ஸீரதுன் நபி மீலாத் சிறப்பு நிகழ்ச்சி 27.10.2024 வெல்லம்பிட்டி அர்க்கம் பாய் பெங்குயிற் மண்டபத்தில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் பாத்திமா றினூசியா ஜெளபர் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கொட்டாஞ்சேனை தாருல் அர்கம் மத்ரஸா மாணவன் ஐ.எம்.இப்றாஹிமின் கிறாத்தையடுத்து வரவேற்புரையை ஏற்பாட்டாளர் மனித நேயன் இர்ஷாத் ஏ காதர் நிகழ்த்தினார்.
கொலன்னாவ ஜும்ஆ பள்ளித்தலைவரும் ஜே.ஜே.பவுண்டேஷன் பணிப்பாளருமான ஐ.வை.எம்.ஹனீப்இ சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
சிறப்புரையை பேருவளை ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய கற்கைகள் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் நிகழ்த்தினார்.
கொழும்பு டி.எஸ்.சேனநாயக்கா கல்லூரி மாணவர்களின் களிகம்பு நிகழ்வுகள்இ .
மருதமுனை கமாலின் இஸ்லாமிய பாடல்கள் மற்றும்
கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இர்ஷாத் ஏ காதர் நற்பணி மன்றத்தின் சார்பாக சிரேஷ்ட ஊடகவியலாளர் புர்கான் பீ இப்திகாரை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் பாத்திமா றினூசியா ஜெளபர் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். இதன்போது குழுக்கள் முறையில் தெரிவு செய்யப்பட்ட 25 பேருக்கு பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


