நாட்டின் பல பகுதிகளில் இன்று கடுமையான வெப்பநிலை நிலவியுள்ளது.
இந்த நிலையில் குறித்த வெப்பநிலையுடனான காலநிலையானது நாளையும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி நாளைய தினமும் நாட்டின் பல இடங்களில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடமேல், மேல், சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான வெப்பநிலை நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இன்று முதல் நாட்டின் சில மாகாணங்களில் இரவு வேளையில் மழையுடனான வானிலை நிலவும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.