ரயில்வே இ-டிக்கெட் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மாகும்புர ரயில் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த அதிகாரி கூறுகையில், அந்த பொலிஸ் அதிகாரி தனது உறவினர் ஒருவரின் பெயரில் ஒரு தனியார் நிறுவனத்தைத் தொடங்கி, ரயில் டிக்கெட்டுகளை வழங்கி, அதன் மூலம் ஒன்லைனில் இ-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததாகவும், அந்த டிக்கெட்டுகள் பல்வேறு நபர்களுக்கு விற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.