பாராளுமன்றத்திற்கு இன்று காலை சென்ற பொலிஸ் மா அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பாதுகாப்புக் கோரும் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது குறித்துச் சபாநாயகரும் பொலிஸ் மா அதிபரும் இணக்கப்பாடு கண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்துள்ளார்.









