நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடல் 26.02.2025 ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
கடற்படையின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடலில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும், கடல் வழியாக ஆயுதக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மீதான சோதனைகள் உட்பட ஆழ்கடலில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொட மற்றும் கடற்படையின் சிரேஸ்ட அதிகாரிகள் குழு ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.