இரத்தினபுரி – பானந்துறை பிரதான வீதியில் கல்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பானந்துறையில் இருந்து இரத்தினபுரி நோக்கி கவனயீனமாக பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளை முந்திச்செல்ல முற்படும் போதே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் பெண் ஓட்டுநர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 29 வயதுடைய பண்டாரஹேன, கெடலியம்பல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே விபத்தில் மரணித்துள்ளார்.
சடலம் தற்போது இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.