இலங்கை மின்சாரசபையின் பேச்சாளர் தமது பதவி விலகல் கடிதத்தை அமைச்சர் கஞ்சன விஜயசேகரவிடம் கையளித்துள்ளார்.
அத்துடன் தமது ஊடகக் கருத்துக்காக அவர் பொதுமக்களிடம் மன்னிப்பையும் கோரியுள்ளார்.
கல்வியில் சிறந்து விளங்கிய முன்னைய தலைமுறையினரின் முன்னுதாரணத்தை கொண்டு, தேவை ஏற்பட்டால் எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தி மாணவர்கள் படிக்க வேண்டும் என்று அவர் முன்னதாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின்போது கருத்து வெளியிட்டிருந்தார்.
இது பொதுமக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ள நிலையிலேயே அவர் தமது பதவியை விட்டு விலகியுள்ளார்.
இலங்கையில் அதிகரித்து வரும் மின்சார கட்டணம் தொடர்பில் அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
படிப்பதற்கு மின்சாரத்தின் அவசியம் குறித்து கேள்வி எழுப்பியபோதே அவர், எண்ணெய் விளக்குகள் போன்ற பாரம்பரிய முறைகளும் படிப்பதற்கு போதுமானது என்று குறிப்பிட்டிருந்தார்.
தாம் எண்ணெய் விளக்கில் படித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், இன்றைய பெற்றோர்கள் தொழில்நுட்ப முன்னேற்றங்களை மட்டுமே நம்பக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார்










