உலகச் சந்தையில் WTI மற்றும் பிரெண்ட் ரக கச்சா எண்ணெய்களின் விலைகள் கடந்த ஒகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் மிகக் குறைந்த மட்டத்தைப் பதிவு செய்துள்ளன.
இன்று (24) காலை 6.30 மணியளவில் வெளியிடப்பட்ட சந்தை அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.45 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது முந்தைய வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் 3.5 சதவீத வீழ்ச்சியாகும்.
அதேபோன்று, பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 3.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 89.63 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், மேர்பன் (Murban) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சிறிதளவு அதிகரித்து 89.29 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
ஈரானுடனான மோதல்களைத் தொடர்ந்து கடந்த காலங்களில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாரிய தடைகள் ஏற்பட்டதையடுத்து, அதன் விலைகள் சடுதியாக அதிகரித்திருந்தன.
எனினும், மத்திய கிழக்கில் அவ்வப்போது மோதல்கள் தொடர்ந்தாலும், எண்ணெய் விநியோகத்தில் பாரிய தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுவதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.








