பராமரிப்புப் பணிகள் காரணமாக நேற்று (23) தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி இன்று (24) காலை மீண்டும் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணி முதல் குறித்த வீதி போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கீழ் கடுகன்னாவ பகுதியில் ஆபத்தான நிலையில் காணப்படும் பாறைகளைப் பாதுகாப்பாக அகற்றுதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பராமரிப்புப் பணிகளை முன்னெடுப்பதற்காக நேற்று இரவு முதல் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்ததாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.








