லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் தனது 12.5 கிலோகிராம் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் மீள் நிரப்பல் விலையை 745 ரூபாவால் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி, முன்னர் 6,740 ரூபாவாக இருந்த 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,995 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2,720 ரூபாவாக இருந்த 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 2,398 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலைத் திருத்தம் இன்று (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.








