கொழும்பு, வெள்ளவத்தையில் அமைந்துள்ள சிரியானி ட்ரெஸ்பொயின்ட் வணிக வளாகம் இன்று (12) காலை 10.30 மணியளவில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்தியத் திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் ஆகியோரும் குறித்த வணிக வளாகத்தைத் திறந்து வைத்தனர்.
இந் நிகழ்வில் மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரியானி ட்ரெஸ்பொயின்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும், நடிகை பூஜா ஹெக்டேயுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் மற்றும் சமூக ஊடகப் பிரபலங்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது, சிரியானி ட்ரெஸ்பொயின்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 100 இளைஞர், யுவதிகளுக்கு நடிகையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.
வணிக வளாகத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு பெருமளவிலான மக்கள் அங்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புகைப்படங்கள்: அஷ்ரப் ஏ. சமத்












