அநுராதபுரத்தில் சத்தியாகிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த இடத்தில் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த தேரர்கள் இன்று (11) காலை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பௌத்த தேரர்கள் குழுவொன்று கடந்த 7ஆம் திகதி முதல் ருவன்வெலிசாயவிற்கு அருகிலுள்ள தானசாலை வளாகத்தில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது.
குறித்த இடத்திலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த பின்னணியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இதேவேளை, இன்று கொழும்பு மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலமளிக்குமாறு பலங்கொட கஸ்ஸப தேரருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான சூழ்நிலையிலேயே கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று தேரர்களும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.








