அமெரிக்க இடைத்தேர்தலில் தனது குடியரசுக் கட்சி படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியினர் சிறப்பாகச் செயற்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஃபொக்ஸ் நியூஸ் (Fox News) ஊடகத்துக்கு கருத்துத் தெரிவித்த அவர்,
“ஜனநாயகக் கட்சியினர் சிறப்பாகச் செயற்பட்டனர் என நான் நினைக்கிறேன். உண்மையாகவே அவ்வாறு கருதுகிறேன். அவர்கள் கடுமையாகப் போராடினார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தலுக்கு முன்னதாகவே நாட்டில் ஒரு குறிப்பிட்ட அரசியல் மனநிலை நிலவியதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், “இதற்காக நான் குற்றவுணர்வு கொள்ள வேண்டியதில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
பொதுவாக அரசியல் எதிர்க்கட்சியினரை விமர்சித்து வரும் ட்ரம்ப், இம்முறை ஜனநாயகக் கட்சியினரைப் பாராட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.







