இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (29) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. சில வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 337 ரூபாவைத் தாண்டியுள்ளது.
இதன்படி, Seylan வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.05 ரூபாவாகவும், விற்பனை விலை 337.30 ரூபாவாகவும் மாற்றமின்றிக் காணப்படுகிறது.
NDB வங்கியில், டொலரின் கொள்வனவு விலை 327.90 ரூபாவிலிருந்து 328 ரூபாவாகவும், விற்பனை விலை 336.90 ரூபாவிலிருந்து 337 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கியில், டொலரின் கொள்வனவு விலை 328.40 ரூபாவிலிருந்து 328.45 ரூபாவாகவும், விற்பனை விலை 336.54 ரூபாவிலிருந்து 336.59 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில், டொலரின் கொள்வனவு விலை 326.33 ரூபாவிலிருந்து 326.58 ரூபாவாகவும், விற்பனை விலை 336.25 ரூபாவிலிருந்து 336.50 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.50 ரூபாவாகவும், விற்பனை விலை 336.50 ரூபாவாகவும் மாற்றமின்றிக் காணப்படுகிறது.
இந்த விலை விபரங்கள் புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று பதிவாகியுள்ள மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டவை.







