இலங்கை ராமஞ்ஞ மகா நிகாயாவின் அனுநாயக்கராகப் பணியாற்றிய அதிவணக்கத்திற்குரிய கெப்பெட்டியாகொட சிறிவிமல தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (20) இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கண்டி, கெட்டம்பே பகுதியில் அமைந்துள்ள ராஜோபவனாராமய விகாரையில் வைக்கப்பட்டுள்ள தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், மகா சங்கத்தினருக்கும் விகாரையின் தயாக சபையினருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தார்.
கெட்டம்பே ராஜோபவனாராமய விகாரையின் விகாராதிபதியாகவும் கெப்பெட்டியாகொட சிறிவிமல தேரர் பணியாற்றியிருந்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.







