நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்று (14) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், பிற்பகல் 1.00 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடு முழுவதும் பெரும்பாலான பிரதேசங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில், குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.








