யெமனில் உள்ள ஹூதிப் படையினரின் எரிசக்தி முனையங்கள் மற்றும் எரிபொருள் கையிருப்புகள் மீது சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படைகள் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இந்தத் தாக்குதல்களில் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூட்டணிப் படைகளின் பேச்சாளர் துர்கி அல் மாலிகி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், எரிசக்தி விலைகளை அதிகரிக்கும் நோக்கில் ஹூதிப் படையினர் சவுதி அரேபியாவின் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.








