அநுராதபுரம், திறப்பனை நாச்சதூவ வாவியை அண்மித்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ‘அக்போ’ யானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களமும் இலங்கை இராணுவமும் இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த யானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அக்போ யானை கண்டுபிடிக்கப்பட்டபோது நல்ல ஆரோக்கியத்துடன் காணப்பட்டதாக, குறித்த பகுதிக்குப் பொறுப்பான வனவிலங்கு உதவி அதிகாரி புத்திக உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய, அக்போ யானை தற்போது நாச்சதூவ வாவியை அண்மித்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பாதுகாப்பாக நடமாடி வருவதாகச் சுற்றாடல் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.








