மத்திய மலைநாட்டுப் பிரதேசங்களில் நிலவும் பலத்த மழை காரணமாக, கடிகமுவ ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள மண்மேட்டின் ஒரு பகுதி இன்று (16) மீண்டும் சரிந்து விழுந்துள்ளது.
இதனால் ரயில் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மண்ணை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
‘டித்வா’ சூறாவளியைத் தொடர்ந்து மலையக ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், கடிகமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் மண்மேடு சரிந்து ரயில் பாதையில் விழுந்த மூன்றாவது சம்பவம் இதுவாகும்.








