சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடும் நடவடிக்கை 08.10.2026 இடம்பெற்றது.
பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடும் நிகழ்வில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.








