இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (06) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் 334 முதல் 335 ரூபாய் வரையில் பதிவாகியுள்ளது.
செலான் வங்கி
அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் 326.35 ரூபாயாகவும், விற்பனை விகிதம் 335.60 ரூபாயாகவும் மாற்றமின்றி காணப்படுகிறது.
NDB வங்கி
அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் 326.10 ரூபாயிலிருந்து 326.25 ரூபாயாகவும், விற்பனை விகிதம் 335.10 ரூபாயிலிருந்து 335.25 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கி
கொள்வனவு விகிதம் 326.48 ரூபாயிலிருந்து 326.53 ரூபாயாகவும், விற்பனை விகிதம் 334.57 ரூபாயிலிருந்து 334.62 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கி
கொள்வனவு விகிதம் 324.34 ரூபாயிலிருந்து 324.59 ரூபாயாகவும், விற்பனை விகிதம் 334.25 ரூபாயிலிருந்து 334.50 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கி
அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் 326.50 ரூபாயாகவும், விற்பனை விகிதம் 334.50 ரூபாயாகவும் மாற்றமின்றி காணப்படுகிறது.








