பாராளுமன்றம் எதிர்வரும் ஒக்டோபர் 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை கூடவுள்ளது.
இந்த பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பில், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கடந்த செப்டம்பர் 25ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஒக்டோபர் 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழ் 2493/36 மற்றும் 2493/37ஆம் இலக்க வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள், 2493/38ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை மற்றும் பொதுத்தனிசு முகாமைத்துவச் சட்டம் ஆகியவை தொடர்பான விவாதங்கள் இடம்பெறவுள்ளன.
அன்றைய தினம் மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை அரசாங்கத் தரப்பினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரப் பிரேரணைக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 07ஆம் திகதி
ஒக்டோபர் 07ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், காலை 10.00 மணி முதல் 10.30 மணி வரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளும் இடம்பெறவுள்ளன.
இதன் பின்னர் காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
ஒக்டோபர் 08ஆம் திகதி
ஒக்டோபர் 08ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகள் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அதனைத் தொடர்ந்து காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின்போதான கேள்விகள் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
ஒக்டோபர் 09ஆம் திகதி
ஒக்டோபர் 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகள் இடம்பெறவுள்ளன.
இதனைத் தொடர்ந்து காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை தனியார் உறுப்பினர் பிரேரணைகள் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.







