2027 ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளின் இணை அனுசரணையுடன் நடைபெறவுள்ள இத்தொடர், 2027ஆம் ஆண்டு ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் நவம்பர் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
14 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் முதற்கட்டப் போட்டிகள், தலா 7 அணிகளைக் கொண்ட இரண்டு குழுக்களின் கீழ் நடைபெறவுள்ளன.
இலங்கை B குழுவில் இடம்பெற்றுள்ளதுடன், பங்களாதேஷ், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளன. மேலும், ஒரு அணி தகுதிச் சுற்றின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளது.
A குழுவில் ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இக்குழுவின் மற்றுமொரு அணி தகுதிச் சுற்றின் மூலம் தெரிவாகவுள்ளது.
முதலாவது அரையிறுதிப் போட்டி நவம்பர் 17ஆம் திகதி கேப் டவுனிலும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி நவம்பர் 18ஆம் திகதி ஷ்வானேவிலும் நடைபெறவுள்ளன.
2027 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் 21ஆம் திகதி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது.








