வெப்பமான வானிலை நிலைமை தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
01.10.2026 பிற்பகல் 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் நாளைய (02.10.2026) தினத்திற்கு செல்லுபடியாகும்.
இதற்கமைய வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மொணராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பகல் வேளையில் ‘வெப்பச் சுட்டெண்’ (அதாவது மனித உடலுக்கு உணரும் வெப்பம்) “அவதானம் செலுத்த வேண்டிய” மட்டத்தில் காணப்படலாம் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வாழும் பொதுமக்கள் இந்த வெப்பமான வானிலை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








