இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்ததைத் தொடர்ந்து, ICC ஆடவர் ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை 6ஆவது இடத்திலிருந்து 7ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது.
இதனையடுத்து, இங்கிலாந்து 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இரு அணிகளும் தலா 95 தரவரிசைப் புள்ளிகளை பெற்றுள்ளன.2025ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை, 4ஆவது இடத்திற்கு முன்னேறியிருந்தது. குறிப்பாக சொந்த மண்ணில் தொடர்ச்சியாக பெற்ற சாதனைத் தொடர் வெற்றிகள் அணியின் தரவரிசை முன்னேற்றத்திற்கு உதவின.
இந்தச் சிறப்பான பெறுபேறுகளின் அடிப்படையில், 2027 கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான நேரடி தகுதியையும் இலங்கை பெற்றுள்ளது.
தற்போதைய தரவரிசை சரிவு, 2027 உலகக் கிண்ணத்திற்கான இலங்கையின் தகுதியை பாதிக்காது.
ICC-யின் சமீபத்திய தரவரிசையின்படி, இலங்கை டெஸ்ட் தரவரிசையில் 7ஆவது இடத்திலும், T20I தரவரிசையில் 9ஆவது இடத்திலும் உள்ளது.








