2026 நவம்பர் 1ஆம் திகதி முதல் சில குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது செல்லுபடியாகும் வரி செலுத்துநர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கணக்கு ஆரம்பிக்கும் போது, கட்டிட வரைபட அனுமதியைப் பெறும் போது, மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்யும் போது மற்றும் மோட்டார் வாகன உரிமத்தைப் புதுப்பிக்கும் போது TIN இலக்கத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், காணி அல்லது காணி உரிமையைப் பதிவு செய்யும் போது, வியாபாரத்தைப் பதிவு செய்யும் போது, இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமொன்றின் பங்குகளைப் பரிமாற்றம் செய்யும் போது மற்றும் கடன் அட்டையைப் பெறும் போதும் செல்லுபடியாகும் TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர், TIN இலக்கம் செல்லுபடியாகும் நிலையில் உள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதுவரை TIN இலக்கத்தைப் பெறாதவர்கள், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையவழிச் சேவை மூலம் விண்ணப்பித்து TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TIN பதிவு செய்ய:
https://eservices.ird.gov.lk/








