(அஷ்ரப் ஏ. சமத்)
பலகத்துறை – போரத்தொடுவ, கொச்சிக்கடை தாருஸ்ஸலாம் அகடமியின் 10ஆவது ஆண்டு விழாவும், மீலாதுன் நபி விழாவும் கடந்த 13ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றன.
நிகழ்வில் பிரதம அதிதியாக குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று நிபுணர் டாக்டர் சாபி சஹாப்தீன் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக அஷ்ஷேக் அல் ஹாபில் அல் ஹாரி ருமைஷ், அஷ்ஷேக் அலிம் ஷாகிர், சைபுல்லாஹ் இஷ்காணியா, அஷ்ஷேக் இல்யாஸ் மற்றும் தேசமான்ய சமூக சேவையாளர் டாக்டர் முஹம்மது நிசார் முஹம்மது நஜாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், உலமாக்கள், பெற்றோர்கள் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது புத்தளம் காசிமியா மற்றும் பலகத்துறை மத்ரஸா மாணவர்களின் பங்கேற்புடன் அறிவுக் களஞ்சியம், பேச்சு மற்றும் கிராஅத் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் விசேட மார்க்க சொற்பொழிவை அஷ்ஷேக் அலிம் ஷாகிர் நிகழ்த்தினார்.













