அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் உள்ள பயணிகள் இன்று (19) முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட விதிகளுக்கு அமைய இந்த நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது.
எனினும், சில வாகனங்களில் பின் இருக்கைகளில் பயணிப்பவர்களுக்கான ஆசனப்பட்டிகள் பொருத்தப்படாததால், விதியை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
அந்த கால அவகாசம் நேற்று (18) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.








