ரயில் பொது முகாமையாளரை பதவி நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடைவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றியடைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
முன்னர் சில தொழிற்சங்கங்கள் முன்னெடுத்ததைப் போன்று, பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சதி வேலைநிறுத்தங்களை முன்னெடுக்கும் நோக்கம் தமது சங்கத்திற்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








