BRICS நாடுகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையின் மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன.
- ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்து பாலஸ்தீன மக்களை “தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ” கட்டாயமாக வெளியேற்றுவதற்கு BRICS தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
- போரினால் பெரும் அழிவை சந்தித்துள்ள காஸா பகுதியில் “புவியியல் அல்லது மக்கள்தொகை மாற்றங்களை” ஏற்படுத்துவதற்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரண மற்றும் பணி நிறுவனமான UNRWA-வுக்கு தங்களது உறுதியான ஆதரவை BRICS தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், ஐ.நா. பொதுச் சபையால் வழங்கப்பட்டுள்ள அதன் பணிப்பொறுப்பை முழுமையாக மதிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.
- ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் சட்ட மற்றும் வரலாற்று நிலையை மாற்றும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள BRICS தலைவர்கள், நகரிலுள்ள அனைத்து மத மற்றும் புனிதத் தலங்களையும் மதிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.








