முக்கிய நகரமான மோகாவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பாதைகளில் ஒன்றான பாப் அல்-மன்தெப் நீரிணையில் தனது அதிகாரத்தை விரிவுபடுத்தி, யேமனின் ஒட்டுமொத்த செங்கடல் கடலோரப் பகுதியின் கட்டுப்பாட்டையும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், யேமனின் மோகா விமான நிலையத்தைக் இலக்கு வைத்து சவூதிப் படைகள் இரண்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஹூதிகளுடன் தொடர்புடைய அல்-மஸீரா (Al-Masirah) அலைவரிசை செய்தி வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

September 11, 2026
0 Comment
5 Views






