அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இன்று (11) பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் எதிர்பார்த்ததை விட அதிகளவான மழைவீழ்ச்சி கிடைத்ததன் காரணமாக, மின் உற்பத்திக்கான செலவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக, அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், அதற்கமைய மின் கட்டண அதிகரிப்புக்கான கோரிக்கையை முன்வைக்க எந்த வகையிலும் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், எதிர்வரும் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதற்கான உரிய நடவடிக்கைகளை வலுசக்தி அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.








