22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிமன்ற அமைப்பு (திருத்தச்) சட்டமூலம் ஆகியவை எதிர்வரும் செப்டம்பர் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இன்று (10) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில், குறித்த சட்டமூலங்களின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை செப்டம்பர் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.








