டித்வா புயலை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தங்களில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பில் முழுமையான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழுவின் கால அவகாசம் டிசம்பர் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க முன்வைத்த யோசனைக்கு அமைய இந்த கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
2026 ஜனவரி 21ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக, குழுவினால் அவதானிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் அதுதொடர்பான பரிந்துரைகளை அறிக்கையிடுவதற்கு மேலதிக காலம் தேவைப்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம், குறித்த விசேட குழு தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.









