மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவை இன்று (10) முன்னிலையாகுமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
இதன்படி, குறித்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை 9.30 மணிக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிக் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் விமானப்படை தளபதி அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.









