சுமார் 80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு சட்டவிரோதமாக Telegraphic Transfer (T/T) முறையின் ஊடாக மாற்றியதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் மருதானை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2023 முதல் 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், சுமார் 80 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை இவ்வாறு வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.









