சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவரை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நேற்று (08) காலை ராகம, பொடிவீகும்புர பகுதியில் கிடைத்த தகவலின் அடிப்படையில், வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 101 லீற்றர் 250 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானம், அதாவது 135 போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









