ஈரானுக்கு எதிரான தனது பொருளாதார நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து முன்னெடுக்கும் என அமெரிக்க வெளியுறவுத்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஈரான் அரசாங்கத்துடன் தொடர்புடைய விமானப் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த 36 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடைகள் விதித்ததைத் தொடர்ந்து அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். தடைக்கு உள்ளான நிறுவனங்களில் 27 ஈரானிய விமான நிறுவனங்களும் அடங்குகின்றன.
“ஈரான் ஆட்சியின் நிதி வளங்களை முடக்குவதற்கான ஜனாதிபதி ட்ரம்பின் நடவடிக்கையில் அமெரிக்கா ஒருபோதும் பின்வாங்காது” என டொமி பிகாட் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.










