அநுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த ரஜரட்ட ரெஜினி கடுகதி ரயிலுடன் தனியார் பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து ரத்கம, கபுமுல்ல ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்தச் சமயத்தில் பேருந்தில் சாரதி மட்டுமே இருந்ததாகவும், இதனால் எவருக்கும் காயம் அல்லது பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.









